உனக்கு அடி பட்டு விட்டால்
Author: நதியானவள், December 28, 2008என்னைக் காணவில்லை!
Author: நதியானவள், December 28, 2008நதிகளில் நனைந்து எழுந்து
நடைகளிலே லயம் தொலைத்து
பாதங்கள் புண்ணாகிப்
பாவி உயிர் போகையிலே
பதைத்தெலும்பிக் காயவைத்து
நடைகளின் லயம் தேடிப் பின் – என்
பாதச் சுவடு தேடுகின்றேன்
கண்டவர்கள் யாருமுண்டோ? – என்னைத்
தெரிந்தவர்கள் எவருமுண்டோ?
நாளை ஒரு ஞாயிறே!
Author: நதியானவள், December 27, 2008தாமதமில்லாமல் அழகாகவே விடிகிறது!
அது ஒரு வாரஇறுதி;
என் எதிர்பார்ப்பு மிகுந்த சனிப் பொழுது;
விரலில் அடையாளத்துடன் வருகிறேன் நான்,
புதிதாக அறிமுகமான நண்பனுடன் நீ!
நண்பியுடன் சேர்ந்து நகர்ந்து
நளினமாக உட்காரும் அவளுடன்
ஒதுங்கி இருக்கிறேன் நான்;
என் பார்வை புலவட்டத்துக்குள்
அகப்படுகிறது உன் உருவம்!
ஆசிரியையைக் காணவில்லை!
நான் பயந்து போனேன்!
வகுப்பு முழுவதும் சிரிப்பொலிகள்;
என் இதயம் அழத்தொடங்கியது!
திடீரென்று பரவியதோர் நிசப்தம்;
எல்லோரும் டீச்செரைப் பார்க்க
நாமோ நம்மைப் பார்த்த வண்ணம்!
வகுப்பு உள்ளதென்ற நிம்மதியிலும்
உன் பார்வை தந்த பூரிப்புடனும்
என் இதயம் புன்னகைக்கத் தொடங்கியது!
கரும்பலகையை அழிக்க ஆரம்பித்தார் அவர்;
கலைந்து பறந்தன இலங்கையின் ஆறுகளும் குளங்களும்!
‘ஐவரானோம்‘ என வாசிக்க ஆரம்பித்தார் அவர் – நாம்
‘இருவரானோம்‘ என யோசிக்க ஆரம்பித்தோம்!
உனக்கடுத்த பாடல் எனக்கு முறை ஆனபோது
உள்ளே பறந்தன பட்டாம்பூச்சிகள்!
உன் முக பாவங்களைப் பார்த்த வண்ணமே
என் முக பாவங்கள் மாறத் தொடங்கின,
ஆசிரியை கிளம்பத் தயாரானார்!
அடிவயிற்றில் கலைந்தன பட்டாம்பூச்சிகள்!
நான் நம்பிக்கை இழைக்கவில்லை!
இதுவோ வார இறுதி;
நாளையோ ஞாயிறு!!!!

