மறு தாக்கம்
Author: நதியானவள், December 18, 2009December 18, 2009
பிரட்டிப்போட்ட கரப்பானின்
பிய்ந்து கொண்டிருக்கும்
இறகுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது மனது
சாத்தியப்பாடுகள் தரும்
நிகழ்தகவுகளின் அன்புகளில்
நெரிந்து வாழப் பழகுகிறது
நசிந்த உயிர்
பெயர் எழுதப்படாத கண்ணீர்
யாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்
ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை
முற்றுப்புள்ளிகளற்றுப் போன
இறுதிக் கவிதையின் முடிவாய்
மிஞ்சி விளைகிறது
காயம்
நிரந்தரமற்ற தூக்கத்தில்
நெருடும் விடியலில்
காற்றில் கீறுகிறது
பாச விரல்
இன்னொரு கரப்பானை
இறுகப் பிடித்தபடி


December 29th, 2009 at 5:46 am
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியாவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!
December 30th, 2009 at 9:44 pm
நன்றி…
February 26th, 2010 at 9:08 am
Really Superb mayooy superb manyoo
February 26th, 2010 at 9:09 am
Really Superb Mayoo
March 31st, 2010 at 8:31 pm
Thanks…