Archive for June, 2009


காத்திருப்பு

Author: நதியானவள், June 25, 2009
June 25, 2009

நான் எழுதி குறையாக விட்ட
கவிதைகள் காத்திருக்கின்றன,
நீ வந்து நிரம்புவாய் என்று..
இடைவெளிகளிலும்…..;
எழுத்துப் பிழைகளிலும்…;


நிழலாக…

Author: நதியானவள், June 15, 2009
June 15, 2009

கொதிக்கும் மணலில்
நிழல் தேடுகையில்
நினைவுக்கு வருகிறாய் நீ…..
நீயே நிழலாக வருவதால்
சூடு மறக்கின்றன என் கால்கள்!

என் கண்கள்

Author: நதியானவள், June 13, 2009
June 13, 2009

கடவுள் எனக்குத் தந்த
கடைசி வரமும்
கடைசி சாபமும் சேர்ந்து
என் கண்களாகின…..!